
தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சென்னையில் வசிக்கும் விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் வழங்கப்படுவதால் மகளிர் பாதுகாப்பு கண்காணிக்கப்படும்.
இதனை வாங்குவதற்கு பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் 10-ம் வகுப்பு முடித்திருப்பதோடு ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். உங்க திட்டத்தில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் பாதுகாப்புக்காக இந்த பிங்க் நிற ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டும் பெண்கள் கண்டிப்பாக பிங்க் நிற உடை அணிந்திருக்க வேண்டும். இந்த திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளை மகளிர் தினம் என்பதால் அதனை முன்னிட்டு சென்னையில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.