
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதுகிறார்கள். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதுகிறார்கள். இன்று மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்கும் நிலையில் பதட்டம் இல்லாமல் பயமில்லாமல் நிதானமாக தேர்வினை எழுதுமாறு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஆளுநர் ரவி, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தற்போது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.