
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதிப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்பக்ஷன் ரூமிலிருந்து அப்படியே வெளியேற்றி விட்டார்கள். இவர் வெளியேற்றப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு கருதியை வெளியேற்றுவதாக கமல் கூறினார். இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள் .
இந்த நாளில் பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டு கடந்த வாரம் நிகழ்ச்சி இருந்து வெளியேறிய யுகேந்திரனின் மனைவி பிரதீப் வெளியேற்றம் குறித்து வீடியோ ஒன்றில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் பெண்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவு என்று கமல் கூறுகிறார். புன்னகை மன்னன் படத்தில் நடிகர் ரேகாவிடம் அனுமதி கேட்காமல் அவருக்குலிப் கிஸ் கொடுத்தார் கமல். அப்போது நடிகர் ரேகாவிற்கு பதினாறு வயது தான். கமல் நடித்த முக்கால்வாசி படங்களில் லிப் கிஸ் காட்சி இல்லாமல் இருக்காது என்று தெரிவித்துள்ள அவர் பெண்கள் உரிமைக்காக கமல் பேசுவதாக கூறுவது தனக்கு புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
#BiggBossTamil7 #Yugendran wife direct attack on @ikamalhaasan he has no rights to talk about women safety after kissing Rekha without consent #PradeepAntony pic.twitter.com/XMS0YPrfna
— Abhishek (@funkyboss96) November 5, 2023