தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதைத்தொடர்ந்து புஷ்பா 2 கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படம் இதுவரையில் 1871 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவில் வெளியான படங்களில் மிகவும் குறுகிய காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையை புஷ்பா 2 பெற்றுள்ளது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் புஷ்பா 2 படத்தால் மாணவர்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டதாக ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கல்வி ஆணையத்துடன் தலைமை ஆசிரியர் கலந்துரையாடியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது, தற்போது அரசு பள்ளியில் மாணவர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினம் ஆகிவிட்டது. நான் வேலை பார்க்கும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் புஷ்பா படத்தை பார்த்து கெட்டுப் போய்விட்டனர். அந்த படத்திற்கு எந்தவித பொறுப்பும் இல்லாமல் சான்றிதழை கொடுத்துள்ளனர். மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாத வகையில் ஹேர் ஸ்டைல் வைத்துள்ளதோடு மிகவும் ஆபாசமான முறையிலும் பேசுகிறார்கள். மேலும் இதை பார்க்கும் போது நானே தோற்று விட்டேனோ என்று தோன்றுகிறது என்று கூறினார்.