
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாதுரை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் குஷ்பூ ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பூ கூறியதாவது, அண்ணாத்த படத்தில் நடித்திருக்கவே கூடாது முதலில் இயக்குனர் கூறிய போது நானும், மீனாவும் தான் படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறினார். முதலில் ரஜினிக்கு ஜோடி கிடையாது என்றுதான் கதையை கூறினார். ஆனால் நானும் மீனாவும் ஷூட்டிங் சென்ற பிறகு தான் ரஜினிக்கு நயன்தாரா ஹீரோயினாக வந்தார்.
நாங்கள் ரஜினியுடன் அலப்பறை செய்வதாகவும், தங்கையை தேடி முன்பே சொல்லும் போது நன்றிகளும் செல்வதாக தான் கதை இருந்தது. ஆனால் கதைக்களம் மாறியதால் இடைவேளை வரை மட்டுமே படத்தில் வந்தோம். அந்த கேரக்டர் எதற்காக என்பது போல கேள்விகள் இருந்தது என குஷ்பூ வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் முன்பே தெரிந்திருந்தால் அண்ணாத்த படத்தில் நடித்திருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.