
தமிழில் மிக முக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான நடராஜன் இன்று இறந்த நிலையில் அவருக்கான அஞ்சலியை அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று நடிகர் சூர்யா செலுத்தியுள்ளார். தயாரிப்பாளர் நடராஜன் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான வேல் திரைப்படத்தை தயாரித்தவர்.
அதேபோல் விஜய் அவர்களின் கண்ணுக்குள் நிலவு, அஜித் அவர்களின் ஆழ்வார் மற்றும் விக்ரம் அவர்களின் தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
ஆனால் சூர்யா நேரடியாக வந்து அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தியது போல் மேற்கண்ட மூவரும் வரவில்லை. உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை சூர்யாவும் கொண்டிருக்கிறார். ஆனால் சூர்யாவுக்கு இருக்கும் கருணை மற்ற 3 உச்ச நட்சத்திரங்களுக்கும் இல்லையா என சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.