
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும் ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும் என்ற நடிகை அனுபாமா கூறியுள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுபாமா மலையாளத்திலும் கலக்கி வருகிறார்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், மூன்று ஆண்டுகளாக நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். ஒரு நடிகைக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டு பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். கதாபாத்திரங்கள் பிடித்து இருந்தால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.