தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஆசையை  நடிகர் நெப்போலியன் நிறைவேற்றியுள்ளார். அதாவது பின்னணி பாடகி ஜோதி அமெரிக்கா செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கியுள்ளார். இவரின் ஆசையை அறிந்த  நடிகர் நெப்போலியன் அதை நிறைவேற்றியுள்ளார்.

இதுகுறித்து ஜோதி கூறுகையில் தனது கனவு நெப்போலியன் மூலம் நனவாகியுள்ளதாகி  நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். ஒன்றிய அரசு வழங்கும் National Award of persons with disabilities என்ற விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே பாடகியான ஜோதி இசைப்பிரிவில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.