நியூசிலாந்து வீரரும் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், இந்தாண்டு ஐபிஎல் சீசனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நிபுணர்களுக்கான குழுவில் இடம்பெற்று வருகிறார். தற்போது இவர், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஸ்டைலை ஹிந்தியில் பகிரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வில்லியம்சன் உண்மையில் ஆங்கிலத்தில் பேசுகிறாராம், ஆனால் அந்த வீடியோவில் அவர் ஹிந்தியில் பேசுவதை போல காட்டப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்டதாகும்.

 

வீடியோவில் அவர் கூறுவது: “சஞ்சு சாம்சனின் பேட்டிங் மற்றும் பவர் ஹிட்டிங்கின் முக்கியமான அம்சம், அவரது மூவ்மென்ட் தான். அவர் ஷார்ட் பாலை எதிர்கொள்வதில் மிகவும் வலிமையானவர். அவர் பாக்ஸின் உள்ளே விருப்பமாக நகர்ந்து பாக்பூட்டிலும், ஃபிரண்ட் லெக்லும் நிலை பெற்று பந்து பக்கவாட்டில் தள்ளுவதற்கு கைகள் முழுமையாக இயக்குகிறார்,” என கூறுகிறார்.

முன்னதாக, ஹர்பஜன் சிங்கிடம் இருந்து ஹிந்தி கற்றுக்கொள்வது போன்ற ஒரு நகைச்சுவையான வீடியோவும் வெளியானது. “ஹை, ஐம் கேன் மாமா, நாம்தோ சுனா ஹி ரஹேகா” என ஆரம்பிக்கும் அந்த வீடியோ பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.