
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சவுரப் லண்டனில் இருக்கும் நிலையில் அடிக்கடி இந்தியா வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்த்துவிட்டு செல்வார். இந்நிலையில் தன்னுடைய மனைவி தகாத உறவில் இருப்பது சில நாட்களுக்கு முன்பாக சௌரப்புக்கு தெரிய வந்தது.
இதன் காரணமாக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை மட்டும் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகளின் எதிர்காலத்தை நினைத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அதோடு தன்னுடைய மனைவியையும் அவர் மன்னித்து ஏற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் லண்டன் சென்ற அவர் கடந்த மாதம் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக இந்தியா வந்தார். அப்போது அவர் தன்னுடைய மனைவி தொடர்ந்து அந்த வாலிபருடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்டார்.
அவர்களுக்குள் நடந்த ஆபாசமான வாட்ஸ் அப் உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் முஸ்கான் தன்னுடைய கணவனை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த மார்ச் 4ஆம் தேதி சவுரப்பை கொன்ற இருவரும், அவரது உடலை துண்டித்து, சிமெண்ட்மூடிய ட்ரம்மில் பதுக்கி வைத்துள்ளனர். மார்ச் 18ஆம் தேதி முஸ்கானின் குடும்பத்தினர் அந்த ட்ரம்மை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இருவரும் மார்ச் 19 அன்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட நீல நிற பிளாஸ்டிக் ட்ரம்ப் ஜாலி கோட்டியின் லோகா மார்க்கெட்டில் இருந்து வாங்கப்பட்டது. இங்கு பொதுவாக வீட்டு தேவைகளுக்காக பலர் ட்ரம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். குற்றவாளி முஸ்கான் கோதுமை சேமிக்க வேண்டும் என்ற பெயரில் ரூ. 1,100-க்கு அந்த ட்ரம்பை வாங்கியுள்ளார்.
இந்நிலையிலை இந்த கொடூர கொலைக்கு பிறகு அந்த மார்க்கெட்டில் ட்ரம்ப் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீல நிற ட்ரம்களை வாங்க பயப்படுவதால், வியாபாரிகள் வருவாய் இழப்பில் உள்ளனர். சிலர் வீட்டில் ஏற்கனவே வைத்திருந்த ட்ரம்களை கூட அகற்றத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. விற்பனையாளர்கள், இந்த சம்பவம் அவர்களது வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த பெரும் பாதிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது உள்ளாட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து, ட்ரம்ப் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அடையாள அட்டைகள் கேட்டுப் பதிவு செய்யும்படி கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வியாபாரிகள் இது போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் மனஅழுத்தம் காரணமாக, தங்கள் தொழில் இன்னும் நசுங்கும் நிலைக்கு செல்லக்கூடும் என கவலை தெரிவித்துள்ளனர். முஸ்கான் ரஸ்தோகி மற்றும் சாஹில் ஷுக்ளா செய்த இந்த செயல், ஒரு தொழில்நுட்ப பொருளின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
UP man returns from London to celebrate wife’s birthday, murdered. Body chopped into 15 pieces, dumped in a plastic drum and concealed using cement mixture
In UP’s Meerut, a young man identified the Saurav Rajput returned from London in Feb 2025 to celebrate his wife’s birthday.… pic.twitter.com/z8jV77i17h
— Piyush Rai (@Benarasiyaa) March 19, 2025