மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய துறைகளை விட்டுத்தர முடியாது என பாஜக கறார் காட்டுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெரும்பான்மை இல்லமால் கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் சூழலில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போன்றவற்றின் போது சபாநாயகரின் முடிவும், அவரின் வாக்கும் ஆட்சி மாற்றத்தையே தீர்மானிக்கும் என்பதால் சபாநாயகர் தேர்வில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளது