
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி ஒரண்டியம்மன் கோவில் தெருவில் காமாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சியின் கணவர் கோவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு காமாட்சி மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது காமாட்சி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று காமாட்சி தாய் தனது மகளை பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் உடனே மணிகண்டனை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். வீட்டிற்கு சென்ற மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காமாட்சி தூக்கில் தொடங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காமாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. காமாட்சிக்கும் அவரது மாமியார் பொம்மிக்கும் இடையே மணிகண்டனின் செயினை யார் அணிவது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இதனால் மன உளைச்சலில் காமாட்சி தற்கொலை செய்தது தெரியவந்தது.