
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரை எக்ஸ் பக்கத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவர் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புகையிலை எதிர்ப்பு தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய போது என்னுடைய தந்தை எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். அதாவது புகையிலேயே ஒருபோதும் ஊக்குவிக்க வேண்டாம் என்று கூறினார். நான் இதுவரை அதன்படியே வாழ்ந்து வருகிறேன். சிறந்த எதிர்காலத்திற்கு புகையிலைக்கு பதிலாக ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்போம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சச்சின் டெண்டுல்கர் புகையிலையை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.