
ஹைதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக கூறி சென்னையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண்ணை அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஹரி என்ற வாலிபர்கள் தனியாக வரவழைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து நிஜாம் பேட்டை பகுதியிலுள்ள தங்களுடைய பிளாட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதாவது அந்த இளம் பெண்ணுக்கு மது கொடுத்து அவர்கள் இருவரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பச்சுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.