வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் தேவராஜ்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தார். அப்போது அந்த பாம்பு தேவராஜை கடித்தது. உடனே தேவராஜ் வலியில் அலறி துடித்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் குடிபோதையில் நடந்து கொண்ட நபர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.