
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும்.
அவற்றில் சில நெட்டிசன்களை ஆச்சிரியத்திலும் சில வருத்தத்திலும் ஆழ்த்தும். அப்படி ஒரு காணொளி சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் யானை ஒன்று தனது இறந்து போன குட்டியுடன் மன்றாடும் காட்சி தான் பதிவாகியுள்ளது.
இது நெட்டிசன்களை கலங்கடிக்கும் விதமாக தான் அமைந்துள்ளது. தாய் யானை தனது குட்டி இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் நீண்ட நேரம் குட்டியின் சடலத்துடன் போராடுகிறது. பின்னர் தனது குட்டியை தூக்கி செல்கிறது. இந்த காணொளி இதுவரை 1,70,000 பார்வையாளர்களை கடந்துள்ளது.
https://x.com/ParveenKaswan/status/1859572181773992343