மேட்ரிமோனி தளம் மூலம் பெண்களிடம் ஒரு வாலிபர் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மது என்ற வாலிபர் மேட்ரிமோனி தளத்தின் மூலம் எட்டு இளம் பெண்களை ஏமாற்றி 62,83,000 பணத்தை மோசடி செய்துள்ளார். இவர் பெண்களிடம் பழகி பின் அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறித்து வந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு வேறு ஒரு வழக்கில் மது கைது செய்யப்பட்டார். அதிலிருந்து தப்பித்து வந்த மது தற்போது மோசடி வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து மதுவை கைது செய்தனர்.