
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மனநல காப்பகம் அமைந்துள்ளது. இந்த மனநல காப்பகத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனம் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சங்குளத்தில் செயல்படுகிறது. இந்த நிலையில் மன நோயாளிகளை கட்டுமான பணிகளை செய்ய பயன்படுத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அந்த தொண்டு நிறுவனத்தின் கீழ் இருக்கும் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு மனநல காப்பகத்தில் இருந்து நோயாளிகளை அழைத்து செல்கின்றனர். பின்னர் கட்டாயப்படுத்தி அவர்களை பணியில் ஈடுபடுத்துவதாகவும், உடன்படாதவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சோசியல் மீடியாவில் ஆனது. அதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.