ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி வாத்து மற்றும் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்க தொடங்கிய நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு நடத்தும் கோழிப்பண்ணையிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதனால் பெகாரோ மாவட்டத்திலுள்ள பண்ணையில் இருக்கும் 4000 கோழிகள் மற்றும் வாத்துக்களை கொன்று அழித்ததாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மாதிரி களை சேகரிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.