ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு பேருந்தும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.