இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னா அணிகள் மோதுகிறது. இந்நிலையில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 201 ரன்கள் எடுத்துள்ளதால் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு நிறத் தொப்பியை பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் இப்போது லக்னோ அணி கொல்கத்தா சென்றுள்ள நிலையில் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிராவோ நகைச்சுவையாக பூரன் கால்களில் விழுந்து தொட்டு வணங்கினார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.