
ஈரோடு மாநகர் அதிமுக முன்னாள் துணைச் செயலாளர் வி.கே ராஜு காலமானார். இவருடைய மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், வி.கே ராஜு வயது முதிர்வால் மரணம் அடைந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
வி கே ராஜுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.