தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகரை நேரில் சந்தித்த அவர், தனது பதவி விலகல் கடிதத்தை முறைப்படி ஒப்படைத்தார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது 6ஆவது விக்கெட்டாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த தொடர் ராஜினாமா படலம், அக்கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் பதவி விலகல்களுக்கான உண்மையான பின்னணி என்ன, உட்கட்சி பூசலா அல்லது அடுத்தகட்ட அரசியல் நகர்வா என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளைத் தூக்கி எறிந்துள்ள நிலையில், தமிழக அரசு மற்றும் சபாநாயகரின் அடுத்தகட்ட ஆக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை நோக்கி ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் தற்போது உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
