தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். அதிமுக தொண்டர்களை இன்னொருவர் அபகரிக்க முயற்சி செய்வதோடு அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறொரு இடத்தில் இருந்து இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். என்னுடைய கருத்தை கேட்டதும் வானதி சீனிவாசன் சிரிக்கிறார். பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று கூறினார். அப்போது எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி நாங்கள் எந்த கணக்கிலும் ஏமாற மாட்டோம்.

சாமானிய தலைவர் இயக்கத்தை வலிமையோடு நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் கூட்டல் கணக்கில் தங்கமணி ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துக்கள். தங்கமணி கூட்டல் கணக்கில் ஏமாற மாட்டோம் என்று சொன்னதாக கூறிவிட்டு சிரித்தார். மேலும் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படும் நிலையில் அதனை மனதில் வைத்து தான் அமைச்சர் தங்கம் தென்னரசு மறைமுகமாக பாஜகவின் சாணக்கிய கூட்டல் கணக்கு தந்திரத்தில் அதிமுகவினர் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று கூறியதும் வானதி சீனிவாசன் சிரித்ததும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறி உள்ளது.