தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்சிஎஸ்சி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கல்வி உதவித் தொகையை கல்லூரி நிர்வாகம் வசூல் செய்த பிறகும் மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அத்துடன் இந்த கட்டணம் வசூலிப்பதற்கான ரசீதுகளையும் கல்லூரி நிர்வாகம் தருவதில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி தமிழகத்தில் B.Ed, M.Ed, B.Sc, B.Aஉள்ளிட்ட படிப்புகளை பயிலும் எஸ்சி எஸ்டி மாணவர்களிடம் உதவி தொகையும் பெற்றுக்கொண்ட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது பல்கலை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.