
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே பாஜக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த தொண்டர்கள், இளைஞர்கள் என அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றார்கள்.
ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அவரை நெருங்கி சென்றனர். பின்னர் நடந்து கொண்டே அனைவருக்கும் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துவிட்டு அண்ணாமலை நேரடியாக மணமேடைக்கு சென்றார். அங்கேயும் அவர்களை சூழ்ந்த மக்கள் செல்பி எடுக்க முண்டி எடுத்தார்கள். பிறகு மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.