
சமீபத்தில் விஜய் ஹசாரே கோப்பை தொடர் முடிந்தது இந்த தொடரில் கர்நாடகா அணி சேம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் எடுத்த கருண் நாயர் தொடர் நாயகன் என்ற விருதை பெற்றார்.
இதனால் இவர் சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அணியில் கருண் நாயர் இடம் பெறவில்லை.
இது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில் “கருண் நாயரின் ரண்கள் அபரீதமானது. ஆனால் அணியில் 15 பேர் மட்டும் என்பதால் அனைவரையும் அணியில் சேர்க்க முடியாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.