
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விமர்சித்து பேசியிருந்தார். அதாவது முளைத்து மூணு இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி பேச என்ன தகுதி இருக்கு. தமிழகத்தில் பாஜகவுக்கு எந்தவித செல்வாக்கும் கிடையாது. அதிமுக போட்ட பிசையில் தான் சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு பாருங்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அதிமுக கட்சியில் பல எம்எல்ஏக்களை உருவாக்குவதற்கு பாஜக கடுமையாக உழைத்துள்ளது. இல்லையெனில் அவர்கள் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே இழந்திருப்பார்கள். அதிமுக கட்சி தங்களுடைய வாக்கு சதவீதத்தை பார்த்து பரிதாபப்பட வேண்டும். மேலும் அவர்கள் காலை முதல் இரவு வரை பாஜக பாஜக என்று சொல்வதையே வேலையாக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.