
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆணவ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற 2 பாடலை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு நயன்தாரா கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு தனுசை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.
அவர் தனுஷுக்கு மனிதாபிமானம் இல்லை எனவும் 2 வருடங்களாக நானும் விக்னேஷ் சிவன் பலமுறை கேட்டும் தங்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் கூறினார். அதோடு நீங்க உங்க அப்பா மற்றும் அண்ணன் தயவில் தான் சினிமாவில் தற்போது ஜொலிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நான் தனி ஆளாக இந்தப் போராட்டம் இருந்து சினிமா உலகில் ஒரு பெண்ணாக சொந்த காலில் நின்று இவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்றுள்ளேன் என்று கூறினார்.
அதோடு நடிகர் தனுஷை ஒரு ஜெர்மன் மொழி வார்த்தையாலும் விமர்சித்தார். அதாவது ஜெர்மன் மொழியில் உள்ள schadenfreude என்ற வார்த்தையை தனுசுக்கு அறிமுகம் செய்வதாக கூறினார். இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு இனி யாருக்கும் இந்த தவறை செய்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
இந்த வார்த்தை தற்போது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் அதற்கான அர்த்தம் என்ன என்பது பார்ப்போம். அதாவது பிறரின் துயரத்தை பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் குணம் என்பதே அதற்கான அர்த்தம். மேலும் தனுஷ் மீது நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில் அவருக்கு நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை கொடுத்துவரும் நிலையில் தனுஷ் இந்த விஷயத்தில் அமைதி காத்து வருவது பேசும் பொருளாக மாறி உள்ளது.