
சமந்தா ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா. இடையிடையே அவர் அவ்வப்போது ஜிம் வீடியோக்கள், தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமந்தா தற்போது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். ஆட்டோவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Samantha pic.twitter.com/5a6xDG9Uo3
— Parthiban A (@ParthibanAPN) February 12, 2025