நேபாளத்தின் சிட்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், அழைக்கப்படாத விருந்தினராக ஒரு காண்டாமிருகம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவில், அந்த ராட்சத காண்டாமிருகம் திருமண மண்டபத்தின் வாயிலில் அமைதியாக நுழைந்து, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுற்றித் திரிந்து, பின்னர் காட்டை நோக்கி திரும்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by NEPAL IN LAST 24 HR (@nepalinlast24hr)

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “இது தான் உண்மையான Wild Card Entry” என்றும், “அவனுக்கு அழைப்பு இல்லையேன்னாலும் பரவாயில்லை, என் மீதான அன்பு குறையலை” என்றும் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ Instagram பக்கமான @nepalinlast24hr-ல்பகிரப்பட்டு பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.