சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஐந்தாறு பறவைகள் சுற்றிவளைத்தபோது, ​​நாகப் பாம்பு சௌகரியமாக சென்று கொண்டிருந்ததை காணலாம். தற்போது பாம்பு எங்கு சென்றாலும் பறவை உடனே பறந்து சென்று அதன் முன்பு நின்று அதை பாடாய் படுத்துகிறது. ஒரு பறவையை தாக்க பாம்பு முன்னோக்கி நகர்ந்ததும், அந்த பறவை பின்வாங்குகிறது. சுமார் 60 வினாடிகளில் பறவைகளின் கூட்டம் பாம்பை பலமுறை தாக்குகிறது. இதனால் அந்த பாம்பு, அடித்துபித்து ஓடினாலும் விடுவதற்கு பறவைகள் தயாராக இல்லை என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.