தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது புதிதாக கார் ரேஸ் கம்பெனி ஒன்றை நிறுவியுள்ள நிலையில் துபாய் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் பல வருடங்களுக்கு பிறகு கார் ரேசில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது தன் குடும்பத்துடன் லண்டனில் செட்டிலாக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். நடிகர் அஜித் தற்போது கார் ரேஸ் கம்பெனி தொடங்கிய நிலையில், இனி முழுமையாக அதில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் படிப்படியாக சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் லண்டனில் குடும்பத்துடன் செட்டிலாக இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.