போபால் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான வெப் சீரிஸ் தி “ரயில்வே மேன்”. இந்த சீரிஸில் மாதவன், ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மாதவன் 1988-ல் ரிலீசான ‘கயாமத் சே கயாமத்தக்’ படத்தை பார்த்ததால் ஜூஹி மேல் ஒரு ஈர்ப்பு வந்ததாகவும், அவரை மணம்முடிக்க வேண்டும் என்ற ஆசை லட்சியத்தை தாயாரிடம் கூறியதாகவும் மாதவன் தெரிவித்தார்.