நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திசா பதானி ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில், ஸ்டுடியோ கிரீன் மற்றும் uv கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அதன் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று  வருகிறது. அதே சமயத்தில் படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால் திரையரங்குகளில் படத்தின் வால்யூமை 2 புள்ளிகள் வரை குறைக்குமாறு பட குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்  படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி முதல் நாளில் 58.62 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் வசூல் நிலவரத்தை பட குழு போஸ்டர் வெளியிட்ட அறிவித்துள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 89.32 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆகி 3 நாளில் 100 கோடி வசூலை நெருங்கி வருவது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.