குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுதும் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில்  ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.