
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 37 வயதில் டி20 உலக கோப்பையோடு ஓய்வு வருவதாக அறிவித்தார். கடந்த 2009 இல் அறிமுகமான இவர் டி20யில் 110 ஆட்டங்களில் 3277 ரன்களும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களும், 161 நாள் ஆட்டங்களில் 693 ரன்களும் எடுத்துள்ளார். இவர் பெரும்பாலும் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் ரீள்ஸ்கள் செய்வது வழக்கம். மேலும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என இந்திய விழாக்களுக்கு தவறாமல் வாழ்த்துக்களை தெரிவிப்பார்.
இவர் புஷ்பா 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தில் அந்த மாதிரியாக எதுவும் வரவில்லை. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில உருவாகும் ராபின் ஹுட் என்ற படத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் நிதின், நடிகை ஸ்ரீலிலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.