உலகம் முழுவதும் பீட்சா, பர்கர் உள்ளிட்ட பாஸ்ட் புட உணவு வகைகள் பிரபலமாக இருந்து வருகிறது. இதற்கான கடைகள் உலகம் முழுவதும் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜப்பானில் உள்ள டோமினோஸ் கிளை ஒன்றில் பணியாளர் ஒருவர் பீட்சாவிற்கு மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது கையில் கிளவுஸ் போட்டிருந்தாலும் அதனுடன் மூக்கை நோண்டிவிட்டு மீண்டும் அதே கையை வைத்து பிசைவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனை அடுத்து இதை பார்த்த டோமினோஸ் நிறுவனம் குறித்த ஊழியரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உயரமான உணவுகளை வழங்குவதை தங்கள் நோக்கமாக கொண்டிருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.