
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர் லீனா காந்தி திவாரி. இவர் மும்பை மாநிலத்தில் பன்னாட்டு மருந்து கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த நமன் சனா என்ற பகுதியில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு அமைந்துள்ளது.
அங்கு லீனா இரண்டு வீடுகளை வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது. அந்த வீடுகளில் மதிப்பு சுமார் 639 கோடியாகும். அந்தக் குடியிருப்பின் அருகில் அரபிக்கடல் அமைந்துள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூபாய் 2.85 லட்சம். மொத்த பிளாட்டின் சதுர அடி 22572. இதற்கு ஜிஎஸ்டி 63.9 கோடி. எனவே லீனா திவாரி வாங்கிய இரண்டு வீடுகளின் மொத்த மதிப்பு ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூபாய் 703 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பல கோடி மதிப்பிலான வீடுகளை வாங்கிய லீனா திவாரி இந்தி நடிகையான ஜூகி சாவ்லாவின் நெருங்கிய தோழி. கோடாக் மகேந்திரா வங்கியின் நிறுவனர் உதய்கோடாக் என்பவர் நமன் சனாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 400 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.