
ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நயன்தாரா பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்தார். இதனால் தான் அவருடைய மார்க்கெட் உயர்ந்தது. பில்லா படத்தில் நடித்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தார். அந்த படத்திற்கு பிறகு ஸ்டைலான லுக்கில் களமிறங்கினார் நயன்தாரா. தற்போது ஒரு பிசினஸ் வுமனாகவும், முன்னணி நடிகையாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் குடும்பத்தை கவனிக்கும் ஒரு பெண்ணாகவும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெண்ணாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் தான் இன்று நம்பர் ஒன் நடிகை. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அதுவும் விளம்பர படத்தில் வெறும் 50 வினாடிக்கு மட்டும்தான் நடிக்கிறாராம். அதற்கு ஐந்து கோடி வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித். விஜய் இவர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக இந்த சம்பளம் பார்க்கப்படுகிறது.