விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கேப்டன் மகன் விஜய பிரபாகரன், பாஜகவின் ராதிகா, காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் ஆகியோரை எதிர்த்து நேரடியாக களமிறங்குகிறார். நட்சத்திர வேட்பாளராக கருதப்படும் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு 17 கோடியாகும். இதில், அசையும் சொத்து ₹11.38 கோடி, அசையா சொத்து ₹6.57 கோடி. கடன் ₹12 கோடி. மேலும், பிரேமலதா பெயரில் ₹6.49 கோடி அசையும் சொத்தும், ₹48 கோடி அசையா சொத்தும் உள்ளன.