தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர் நடிப்பில் கடைசியில் அரண்மனை 4 வெளிவந்தது. இந்த படத்தில் யோகி பாபு சரளமாக நகைச்சுவையாக பேசி மக்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து கங்குவா, மெடிக்கல் மிராக்கள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு நகைச்சுவை நடிகராகவும், மறுபக்கம் கதையின் நாயகனாகவும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் நடிகர் யோகி பாபுவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி யோகி பாபு ஒரு நாளைக்கு 12 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.