
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். இதனால் நடிகர் பாலகிருஷ்ணாவை பல ரசிகர்களுக்கு பிடிக்கும். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் அண்மையில் பகவந்த் கேசரி என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதில் சட்டமன்ற தேர்தலில் ஹிந்துபூர் தொகுதியில் நடிகர் பாலகிருஷ்ணா போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது அதில் தன்னுடைய சொத்து விவரங்களை பாலகிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவருடைய பெயரில் மொத்தம் 83.61 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அதன் பிறகு அவருடைய மனைவி பெயரில் 140 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. மேலும் இதேப்போன்று அவருடைய மகன் பெயரில் 58.63 கோடி ரூபாய் சொத்து உள்ளது.