எலான் மஸ்க் ட்விட்டரை ‘எக்ஸ்’ என மறுபெயரிட்டு பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, ட்விட்டரின் பிரபலமான நீல நிற பறவை லோகோ, சில மாதங்களுக்கு முன் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது. தற்போது, அந்த 12 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட 254 கிலோ எடை உள்ள பறவை சின்னம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொருட்கள் ஏலையில் $34,375 (சுமார் ரூ.28,61,000) க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை  நடத்திய RR Auction நிறுவனம், வாங்கிய நபரின் விபரங்களை வெளியிடவில்லை.

இந்த ஏலத்தில் ட்விட்டரின் பழைய அலுவலக பொருட்களும், நினைவுப்பொருட்களும் விற்கப்பட்டது. அதேஏலத்தில்  1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கையொப்பமிட்ட Apple கம்பனியின் செக் $112,054 (சுமார் ரூ.93,25,000) க்கும்,  Apple-1 கணினி $375,000 (சுமார் ரூ.3.12 கோடி) க்கு, மேலும் துவக்கத் தொகுப்பு கொண்ட 4GB முதல் தலைமுறை iPhone $87,514 (சுமார் ரூ.72.85 லட்சம்)க்கும் விற்கப்பட்டன. மேலும் டுவிட்டர் லோகோ பல ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.