மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்