கார் மற்றும் ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் செல்பவர்களை கவரும் வகையில் வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை ஊபர் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் அவர்களின் அலுவலகம் இடையே பேருந்து சேவையை உபர் நிறுவனம் வழங்க உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.