தமிழ் சினிமாவில் பிரபலங்கள் சமீப காலமாக விவாகரத்து செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதாவது முதலில் சமந்தா-நாகசைதன் யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். அதன் பிறகு பாலா அவருடைய மனைவி மலரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பிறகு இசையமைப்பாளர் டி. இமான்- மோனிகா ரிச்சர்ட், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதன்பிறகு சமீபத்தில் இசையமைப்பாளரும் நடிகரும் ஆன ஜிவி பிரகாஷ் குமார் பாடகி சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இன்று  நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் திரை உலக பிரபலங்கள் அடுத்தடுத்து இப்படி விவாகரத்து முடிவை அறிவித்து வருவது ரசிகர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று சமீப காலமாக நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளாததால் அவர்களும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.