தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது நளன்குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் நலன் குமாரசாமி சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி செட்டி நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் முன்னதாக மெய்யழகன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வாத்தியாரை திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
