
அரியலூர் மாவட்டம் கீழ கோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(46). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரபு தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் அனிதாவுக்கு தெரியாமல் பிரபு அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த அனிதா தனது கணவர் மீது ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.