ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணியை டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன் பின் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்  ஜாதி கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2023-24 பட்ஜெட்டில் முதல்வர் அசோக் கெலாட் இதை அறிவித்த நிலையில், அரசாங்கம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.5 லட்சம் தம்பதியின் கூட்டு வங்கிக் கணக்கிலும், மீதமுள்ள ரூ.5 லட்சம் 8 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாகவும் டெபாசிட் செய்யப்படும்.